தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளி வாகனம் மூலமாக செல்லும் நிலையில் இன்று பள்ளி மாணவர்களை வழக்கம்போல் ஏற்றிக்கொண்டு வாகனம் ஸ்கூலுக்கு சென்றது. அந்த வாகன சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக ஒரு வயல்வெளியில் விழுந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் கூறுகையில் 40க்கும் மேற்பட்ட மாணவர்களை வாகனத்தில் ஏற்றியதுதான் விபத்துக்கு காரணம் என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments