திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின்வன்னியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு,கல்வி உள்ளிட்டவைகளில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஆயிரம் நாட்கள் கடந்து விட்டது.இந்நிலையில்,இந்த ஒதுக்கீட்டை உடனடியாக அமுல் படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக மற்றும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கொட்டும் மழையில் ஊர்வலமாக வேண்டும்,வேண்டும் இட ஒதுக்கீடு வேண்டும்.
அமுல்படுத்து,அமுல்படுத்து உடனடியாக 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும். கண்டிக்கின்றோம், கண்டிக்கின்றோம் ஆயிரம் நாட்கள் கடந்தும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தாத தமிழக அரசை கண்டிக்கின்றோம்.என்பது உள்ளிட்ட பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பியவாறு இக்கட்சியினர் ஊர்வலமாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்தனர்.
பின்னர்,தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும்,தமிழக அரசை கண்டித்தும்,இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த கோரியும், கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் வி.எம்.பிரகாஷ் தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் சூ.வே.ரவி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் டில்லிபாபு, அமைப்பு செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அனைவரையும் இளைஞர் அணி செயலாளர் சுதாகர் வரவேற்றார். கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் வி.எம்.பிரகாஷ் ,முன்னாள் மாநில துணைத்தலைவர் ஜெயவேல்,முன்னாள் மாநில துணைபொது செயலாளரும், முன்னாள் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிமன்ற தலைவருமான செல்வராஜ்,முன்னாள் மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர்.
இதில்,வன்னியர் சங்க மாவட்ட தலைவர் கேசவன்,முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக்,மாவட்ட இளைஞரணி தலைவர் அன்பழகன்,ஒன்றிய செயலாளர்கள் எல்லாபுரம் இரா.ப.முரளி,கோபால், ஸ்டாலின்,ஜெயபால்,எழில், குருமூர்த்தி,விஜயகுமார், ஒன்றிய தலைவர்கள் சே.கோவிந்தன்,நம்பியார், சிலம்பரசன்,பாலா,பாஸ்கர் எத்திராஜ், சங்கர் ,பாஸ்கர், உள்ளிட்ட மாவட்ட,ஒன்றிய, பேரூர்,கிளை கழக நிர்வாகிகள்,அணிகளின் அமைப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில், கும்மிடிப்பூண்டி பேரூர் செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
0 Comments