கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரியில் ரெடிங்க்டன் நிறுவனத்தின் ரெடிங்க்சன் பவுண்டேஷன், ஷேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனம் இணைந்து இயற்கை வள திட்டத்தின் கீழ் சூரிய சக்தி மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் 10.5லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த குடிநீர் சுத்திகரிக்கப்படட்ட மையத்தின் திறப்பு விழா ஊராட்சி தலைவர் டி.ஆனந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஊராட்சி துணை தலைவர் கற்பகம் ஏழுமலை, ஊராட்சி செயலாளர் குப்பைய்யா, வார்டு உறுப்பினர்கள் தமிழ்செல்வி புருஷோத்தமன், கணேசன், நதியா வெங்கடேசன், சதீஷ், ராமஜெயம் முருகன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ரெடிங்க்டன் நிறுவன முதுநிலை மேலாளர் குப்புசாமி, செயல் அதிகாரி சோமசுந்தரம், நிர்வாகிகள் செல்வா, தலைமை மேலாளர் ஸ்டீவ், பொது மேலாளர் பிரபாகர், முதுநிலை மேலாளர் ரதிதேவி, துணைதலைவர் கண்ணன் பங்கேற்றனர்.
தொடர்ந்து இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை ரெடிங்க்டன் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் ஊராட்சி தலைவர் டி.ஆனந்தராஜ் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ரெடிங்க்டன் நிறுவன அதிகாரிகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் செயல்படும் விதம் குறித்து அப்பகுதி் பெண்களுக்கு விளக்க உரையாற்றினர். இதன் பின்னர் நிகழ்வை ஒட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
0 Comments