சிடோ புயலின் கோரத்தாண்டவம்..... 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

 


இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று அதற்கு சீடோ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் கிழக்கு ஆப்பிரிக்கா கடற்பகுதியில் நிலைக் கொண்டிருந்ததால் மலாவியில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஊருக்குள் வெள்ளம் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சிடோ புயல் மொசாம்பிக் நாட்டையும் தாக்கியுள்ளது. இதனால் கபோ டெல்கட உள்ளிட்ட கடலோர மாகாணங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மொசாம்பிக் நாட்டிலும் 34 பேர் உயிரிழந்ததாகவும் 300க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Post a Comment

0 Comments