100 நாள் வேலை திட்டத்தில்,மனிதர்களுக்கு பதில் இயந்திரங்கள் பயன்படுத்தும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா..?


திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் வாயிலாக 100 நாள் பணியாளர்களைக் கொண்டு நடைபெறும் பணியின் பெயர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம். அதன் அடிப்படையில் திருவலங்காடு ஒன்றியத்தில் அனாதீன நிலத்தில் புதிதாக குளம் வெட்டும் பணியை 100 நாள் பணியாளர்களை கொண்டு பணி செய்யாமல் ஜே சி பி இயந்திரம் இதர இயந்திரங்களை கொண்டு பணிகளை செய்ததால் குற்றச்சாட்டு எழுந்து திமுக ஊராட்சி மன்ற தலைவரும் ஒன்றிய அவை தலைவர் மீது பாரத பிரதமர் முதல் திருவலங்காடு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வரை புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட உயர் அதிகாரிகள் காவேரி ராஜபுரத்தில் பணி நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தலைவர் பதவி பறிக்கப்படுமா? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது மாவட்ட நிர்வாகத்திற்கு புதிராக இருந்து வருகிறது.

காவேரி ராஜபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 30லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது இதேபோன்று மாவட்டம்  முழுவதும் 526 ஊராட்சிகளுக்கு13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணியை 100 நாள் பணியாளர்கள் கொண்டு மனித உழைப்பின் அடிப்படையிலேயே கிராமத்தின் நலன் கருதி குலம் வெட்டுதல் நீர்ப்பாசனம் அமைத்தல் மக்களுக்கு பயன்பெறக்கூடிய திட்டங்களை தீர்மானங்களாக நிறைவேற்றி ஒன்றிய ஒப்புதல் பெற்று மக்கள் உழைப்பை கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்பது தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக செயல்படுத்த வேண்டும். இவை அனைத்தையும் மீறி காவேரி ராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் திருவலங்காடு ஒன்றிய அவைத்தலைவர் அனைத்து விதிமுறைகளை மீறி அனாதீன நிலத்தை கனரக வாகனங்களை வைத்துக்கொண்டு பகிரங்கமாக இரவு பகல் பணிகளை நிறைவேற்றி அந்த பணியை 100 நாள் பணிக்கு வந்த பய னாளிகளைக் கொண்டு மேற்கொண்டதாக பதிவேடுகளை பதிவு செய்து ஒன்றிய அலுவலகத்தை ஏமாற்றும் உயர் அதிகாரிகளை ஏமாற்றியும் போலியான 100 நாள் நபர்களை உருவாக்கியும் 100 நாள் பயனாளிகளை உருவாக்கியும் லட்சக்கணக்கில் கொள்ளை அடித்ததாக புகார் எழுந்ததன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட நபர்கள் கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் நடைபெறும் ஊழல்களை குறித்தும் முறைகேடுகள் குறித்தும் பிரதமர் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர் வரை புகார் கொடுத்துள்ளனர்.



இந்த திட்டத்தின் நோக்கமே ஏழைகள் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்திற்கு 100 நாள் பணியை உருவாக்கி அதன் மூலம் நாள்தோறும் தங்கள் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் காண வேண்டும் நாள்தோறும் மக்கள் பயனடைய வேண்டும் என்ற காரணத்திற்காக ஊராட்சி நிர்வாகத்தின் வாயிலாக வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சாயத்து உதவி இயக்குனர் பொறியாளர் மேற்பார்வையாளர் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவரின் கண்காணிப்பில் பணிகள் நடைபெற வேண்டும் என்ற விதியை முழுமையாக ஊராட்சி மன்ற தலைவர் நிராகரித்துவிட்டு எந்த நோக்கத்திற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டதோ முற்றிலும் தவிர்த்து விட்டு மக்கள் உழைப்பின்றி கனரக இயந்திரங்களைக் கொண்டு 100 நாள் பணியை தொடர்ந்து செய்து வந்தார் அதே ஊராட்சியில் நீர்நிலைகள் ஆழப்படுத்த போக்கு கால்வாய்கள் தூர்வாருதல் போன்ற பல்வேறு பணிகளை 100 நாள் பணியாளர்களைக் கொண்டு பயன்படுத்தாமல் அந்தப் பணிகளையும் கனரக இயந்திரங்களைக் கொண்டு பணிகளை நிறைவேற்றி உள்ளார் இதன் மூலமாக லட்சக்கணக்கான ரூபாய் கனகர இயந்திரங்களுக்கு வழங்கப்பட்டது.



 இந்தப் பணியை பணியாளர்களை போன்று நிறைவேற்றினால் 25 நாட்கள் ஆகும் இயந்திரங்களைக் கொண்டு இரண்டு மூன்று நாட்களிலே ஜேசிபி இயந்திரங்களை வைத்து நிறைவேற்றி உள்ளனர் ஊராட்சிகளில் பதவி காலம் இந்த ஆண்டு முடிவடையும் தருவாயில் பஞ்சாயத்துகளில் உள்ள அனைத்து நிதிகளையும் போலி எம்புக் பதிவு செய்து போலி பில் புக் தயார் செய்து தைரியத்துடன் பஞ்சாயத்து வருவாயை சூறையாடி உள்ளனர்.இதுகுறித்து அனைத்து தரப்பு உயர் அதிகாரிகளுக்கும் புகார்கள் சென்றதன் அடிப்படையில் உயர் அதிகாரிகள் பணி நடைபெற்ற இடத்தில் விசாரணை செய்து ஜேசிபி, பொக்லைன் , கனரக இயந்திரங்கள் கொண்டுதான் பணிகள் நிறைவேற்ற உள்ளதை ஊர்ஜிதம் செய்துள்ளனர் அவர்களிடம் இது குறித்து கேட்டபோது இந்த பணிகள் அனைத்தும் மனித பணியாளர்களைக் கொண்டுதான் பணிகள் நிறைவேற்ற வேண்டும் இங்கே மாறாக ஜேசிபி எந்திரம் மூலமாக நிறைவேற்றியது கண்டறியப்பட்டுள்ளது இதில் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் பஞ்சாயத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் கனரக இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று  ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் குளருபடி காரணமாக பஞ்சாயத்து தலைவர்கள் ஒன்றிய அலுவலர்கள் பதிவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பூண்டி ஒன்றியத்தில் பத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் முறைகேடுகள் காரணமாக இந்த தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவின் நீக்கம் செய்யப்பட்டதும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டதும் நடைபெற்ற சம்பவம் மீண்டும் திருவலங்காடு ஒன்றியம் காவேரி ராஜபுரத்தில் நடைபெறுமா என்பதை அனைத்து கிராம மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

Post a Comment

0 Comments