தேனி: 1008 வடைமாலை சாத்தி ஆண்டிபட்டியில் வீர ஆஞ்சநேயருக்கு பால் பழ பன்னீர் அபிஷேகம்


அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டிபட்டி  நகரின் மையப் பகுதியில்  அமைந்துள்ள வீர ஆஞ்சநேயருக்கு  1008  வடைமாலை சூட்டி  அபிஷேக ஆராதனை  நடைபெற்றது.தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு  வீர ஆஞ்சநேயருக்கு பால் பழம் பன்னீர் தேன் சந்தனம் குங்குமம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது

அதனைதொடர்ந்து ராஜ அலங்காரத்தில்  காட்சியளித்த வீர ஆஞ்சநேயருக்கு 1008  வடைமாலை சூட்டி  சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு  மகாதீபாராதனை காட்டப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண் பக்தர்கள் உள்ளிட்ட   ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பொதுமக்கள்  கலந்து கொண்டு ராஜ  அலங்காரத்தில் காட்சி அளித்த வீர ஆஞ்சநேயரை சாமி தரிசனம் செய்தனர்.

Post a Comment

0 Comments