தமிழகத்தில் மாதந்தோறும் மாணவிகளுக்கு ரூ.1000..... தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 


தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அதாவது தமிழகத்தின் புதுமைப்பெண் திட்டம் மூலமாக அரசு பள்ளியில் 6 முதல் 12 வரை படித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும். இதேபோன்று மாணவர்களுக்கும் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை அரசு பள்ளிகள் போன்று  அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை எழுந்தது.

அந்த வகையில் அரசு இன்று முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் திட்டத்தை விரிவாக்கம் செய்கிறது. அதன்படி தூத்துக்குடியில் கள ஆய்வு மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். அதன்படி இனி அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும். மேலும் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படுவதால் இந்த திட்டத்தில் இனி கூடுதலாக 75,028 பேர் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments