கஜானா காலி..... பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 கிடையாது - தமிழக அரசு அறிவிப்பு



 தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான டோக்கன் ஜனவரி 9-ம் தேதி முதல் வழங்கப்படும் நிலையில் 2.20 கோடி  பேருக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகப்பாக ஆயிரம் ரூபாய் அரசு வழங்கும் நிலையில் இந்த வருடம் ஆயிரம் ரூபாய் தொடர்பான அறிவிப்பு வெளியாகாதது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது புயல் மற்றும் பேரிடர் உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டில் சொந்த நிதியிலிருந்து 2028 கோடி செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் இதன் காரணமாகத்தான் பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் வழங்க நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால்  வழங்க முடியவில்லை என அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments