நாம் தமிழர் கட்சியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகி திமுகவில் கூண்டோடு ஐக்கியம்

 


நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீபகாலமாக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் விலகி வருகிறார்கள். அவர்கள் கட்சியிலிருந்து விலகி வரும் நிலையில் சீமான் மீது அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அதோடு சமீப காலமாக சீமான் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என பலர் விலகி வரும் நிலையில் தற்போதும் கட்சி நிர்வாகிகள் பலர் விலகியுள்ளனர்.

அதன்படி திருவள்ளுவர் மாவட்ட நிர்வாகிகள் சதீஷ் மற்றும் சபரீஷ் உட்பட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். இவர்கள் அனைவரும் அமைச்சர் நாசர் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். மேலும் சமீப காலமாக சங்கி என்றால் நண்பன் என்று பாஜகவுக்கு ஆதரவாக சீமான் பேசி வருவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments