ஒரே இரவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆபிசை அடித்து நொறுக்க 10 காங்கிரஸ் நிர்வாகிகளே போதும் என்று கேரள காங்கிரஸ் தலைவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பினராயி பகுதியில் உள்ள வெண்டுட்டாவில் புதிதாக கட்டப்பட்ட காங்கிரஸ் அலுவலகத்தை மர்ம நபர்கள் சூறையாடினர்.
ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும், அலுவலகத்தின் கதவை தீவைத்தும் எரிக்க முயன்றனர். அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் ஏற்படவில்லை.இருப்பினும், கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்களே இந்த தாக்குதலை நடத்தியதாகவும், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், 'இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் கட்சியினர் தயாராக இருக்க வேண்டும். ஒரே இரவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆபிசை சூறையாட வேண்டும் என்றால், 10 காங்கிரஸ் தொண்டர்களே போதும்,' எனக் கூறினார். அவரது பேச்சு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments