மேஷம் ராசிபலன்
சிறு ஆலோசனைகளைப் பெறுவது எப்போதும் தேவையாகிறது. ஏனெனில், இவை உங்களை ஒருபோதும் வலுவற்றவராக மாற்றப்போவதில்லை. உங்களுக்கு உதவி தேவை என்று மற்றவர்கள் நினைப்பதை நீங்கள் வெறுக்கிறீர்கள். இது நீங்களும் அறிவானவர் தான் என்ற ஒரு உணர்வினை சற்றும் குறைக்காது. சிலநேரங்களில், வலுவான மனம் கொண்டவர்களுக்குக் கூட, ஆலோசனைகள் தேவைப்படுகிறது. உங்களிடம் ஆலோசனை சார்ந்த உதவிகளுக்காக வருபவர்களிடம், இது உங்களுக்கு தேவையற்றது என்று கருதி அவர்களை மறுக்கக்கூடாது. நீங்களும் இப்படி கேட்கும் நேரம் இல்லாமலா போய்விடும்? ஆகையால், நீங்கள் அவர்களுக்கு உதவும் போது, அது வேறுவழியில் உங்களுக்கு உதவியாக வந்தடையும். இதனை, முயற்சி செய்ய தவற வேண்டாம்!
ரிஷபம் ராசிபலன்
ஒரு குழப்பமான சிந்தனை உங்களை முன்னேற விடாமல் செய்கிறது. அதை விரைவில் நெருங்க வேண்டும். இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு அந்த குழப்பத்தைக் களைந்து விடுங்கள், உங்கள் மன அழுத்தத்தை உங்களை ஆட்கொள்ள அனுமதித்தால், உங்களது புதிய முயற்சிகள் பாதிக்கப்படக்கூடும். எனவே தியானம் அல்லது பிடித்தமான வேலையைச் செய்து, அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருங்கள். நீங்கள் நம்பக்கூடிய தீர்வால், அவர்கள் வெளியேற்றக்கூடும் என்பதால், உங்கள் சிறந்த நண்பர்களிடம் திறந்த மனதுடன் நடந்து கொள்ளுங்கள்.
மிதுனம் ராசிபலன்
புதிய பேச்சுக்கள், யோசனைகள் மற்றும் கருத்துக்களுக்கு உங்கள் மனதைத் திறந்து தயாராக வைத்திருங்கள். ஏற்கனவே முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட வழிகள் மன அழுத்தமில்லாமல் இலகுவாக இருக்கலாம். ஆனாலும், அவை பழைய முடிவுகளை மட்டுமே தரும். உங்கள் அன்புக்குரியவர்களும், எதிர்பாராத சிலநபர்களும் உங்களது நாளை பிரகாசமாக்குவார்கள். இது, நீங்கள் நேசிக்கப்படுவதாகவும், பாராட்டப்படுவதாகவும் உங்களை உணர வைக்கும். உங்களது யோசனைகளை உங்களின் தொழில்முறை அட்டவணையில் முன்வையுங்கள். ஏனெனில், இன்று, அவை நேர்மறையான கண்ணோட்டத்தோடு பார்க்கப்படலாம்.
கடகம் ராசிபலன்
எல்லா தவறுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இன்றைய நாளை உங்களது குடும்பத்திற்காக அர்ப்பணியுங்கள். உங்களது குடும்பதிற்காக செலவிடும் நேரத்தின் அளவை குறைக்கக்கூடிய விஷயங்களை, அனுமதிக்கும் மனநிலையில் இல்லாதிருங்கள். வரவிருக்கும் வாரத்தில் உங்களை சரியான பாதையில் நிலைநிறுத்தக்கூடிய விஷயங்களைத் திட்டமிட்டு ஒழுங்கமைக்க, இன்று சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களது வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்தவர்களைப் பாராட்டுங்கள். சிந்தனைமிக்க செய்கைகளால் அவர்களை ஆச்சரியப்படுத்துவது, உங்களது அன்பினை அவர்களுக்குக் காண்பிப்பதற்கான ஒரு நல்வழியாகும்.
சிம்மம் ராசிபலன்
நீங்கள் நிறைவேற்ற விரும்பும் நோக்கத்தை அடையவிடாது என்பதால், மனஅழுத்தத்தை புறந்தள்ளிவிடுங்கள். உங்களது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். இந்த நாளில், கவலையளிக்கும் எண்ணங்களை நிறுத்திவிட்டு, நேர்மறையானவற்றில் கவனம் செலுத்துங்கள். உடல்நலம் தொடர்பான விஷயங்கள் மிகவும் மோசமாக செல்கின்றன. எனவே, இன்றைய சூழலில் உங்களது வாழ்க்கையை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
கன்னி ராசிபலன்
குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பார்கள். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் வழிகாட்டிகள் போன்றோர் உங்களுக்கு வழிகாட்டும் ஒளியாக இருப்பார்கள். நீங்கள் அவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். உங்கள் அன்புக்குரியவர்கள் உங்கள் பொறுப்புகள் அல்லது கவலைகளைப் பகிர்ந்து கொண்டு இன்று உங்களை ஆச்சரியப்படுத்துவார்கள். குறைவாகக் கவலைகொண்டு, அதிக நேரம் தியானம் செய்யுங்கள். மக்கள் உங்கள் மீது காட்டும் அன்புக்காக அவர்களைப் பாராட்டுங்கள். இன்று உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ளுங்கள். இது நீங்கள் நினைப்பதை விட, உங்களுக்கு அதிகமாக தேவைப்படும்.
துலாம் ராசிபலன்
தேவையற்ற கவலைகளிலிருந்து உங்கள் மனதை விடுவித்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்றே கவனச்சிதறலை உருவாக்கவும். இந்த நாளில் முன்னோக்கிச் செல்ல தேவையான செயல்களைச் செய்யுங்கள். அற்ப விஷயங்களில் நீங்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது. மக்கள் என்ன நினைப்பார்கள் என்பது உங்கள் கவலையாக இருக்கக்கூடாது. உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் விடாமுயற்சியுடன் இருந்தால், சில விரைவான வெகுமதிகள் உங்களைத் தேடி வரும்!
விருச்சிகம் ராசிபலன்
ஆக்கப்பூர்வமானவிஷயங்களில் உங்கள்மனதைச்செலுத்துங்கள். சவால்கள் வரும் போது,அதைப்பார்த்துப்பயப்பட வேண்டாம். பல விஷயங்களைச் செய்ய நீங்கள் அவற்றை வரிசைப்படுத்தி,முக்கியமானவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சமீபத்தில் உங்கள் மனதில் ஏதோ இருக்கிறது. நீங்கள் சில புதிய விஷயங்களைச் செய்ய வேண்டும். இதைத் தொடங்க இப்போது சிறந்த நேரமாக இருக்கும். பதற்றம் இன்று அதிகமாக இருக்கும் என்பதால், நீங்கள் மன ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தனுசு ராசிபலன்
வாழ்க்கையில் பிரச்சினைகள் முடிவற்றவை. எனவே, அவற்றை ஒவ்வொன்றாக ஒவ்வொரு சமயத்தில் கையாளுங்கள். இவற்றில், உங்கள் செயல்பாடுதான் முதன்மையானது. எனவே, பதற்றம் இல்லாமல் இயல்பாகவே இருங்கள். ‘பிரச்சினைகள் என்னும் சூழலில்’ நீங்கள் மட்டுமே சிக்கிக்கொண்டுள்ளீர்கள் என்று எண்ண வேண்டாம். மாறாக, எல்லோருமே அதில் ஏதாவது ஒருவிதத்தில் சிக்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சிலர் அதை புறக்கணிக்கிறார்கள். சிலர் அதை எதிர்கொள்கிறார்கள். நீங்கள் ஒரு ‘பிரச்சினையினை தீர்த்தவுடன், இன்னொன்று உங்கள் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்கிறது. உங்களிடமுள்ள ‘பிரச்சினைகளை தீர்க்கும் போது, விவேகமான அணுகுமுறையைப் பயன்படுத்துங்கள். அது உங்களுக்கு நன்மையினைப் பெற்றுத் தரும். கவலையற்ற அணுகுமுறையும், எதிர்காலத்தைப் பற்றி பயப்படாமல் நிகழ்காலத்தை மகிழ்ச்சியாக கழிக்கும் நிலையும், இப்போது உதவாது. எனவே கவனமாக இருங்கள்.
மகரம் ராசிபலன்
நீங்கள் செய்து முடிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. மேலும், இன்று உங்களுடைய பதட்டத்தின் நிலை எல்லை மீறிய அளவில் உள்ளது. உங்களது கடினமான வேலைப்பளுவிற்கு மத்தியில், நேரத்தைக் கண்டறிந்து உங்களை சற்று தளர்த்தி, ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பார்ப்பதை விட இது சற்று அதிகம் தேவைப்படுகிறது. இத்தகைய சூழலில், விஷயங்களை செய்துமுடிக்க உதவக்கூடிய ஒரு நலம்விரும்பி அல்லது நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரது உதவியை நாடுங்கள். உங்கள் பயபக்தியும், விடாமுயற்சியும் நீண்ட காலத்திற்கு தாராளமான ஊதியமாக மாறும்.
கும்பம் ராசிபலன்
உங்களது வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் நேர்த்தியாக உள்ளன. விட்டுவிடமுடியாத ஒரு மோசமான பழக்கத்தைத் விட்டொழிக்கும் வழிகளைப் பற்றி சிந்திக்க, இது ஒரு சிறந்த தருணமாகும். உங்களது வாழ்க்கையில் பிரவேசிக்க, ஒரு அந்நியர் முயற்சிக்கிறார். இந்த நேரத்தில், அவரின் எல்லா நாடகங்களையும் சமாளிக்க உங்களுக்கு நேரமும், சக்தியும் இருகிறதா என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். பகல் கனவு காண்பது என்பது பின்னாளில் உங்களது நேரத்தை வீணடித்து விட்டது. இந்த அங்கலாய்ப்பான நிலையை நீங்கள் மாற்றிவிட்டு, உங்களது கனவுகளை அடைய பணி செய்யுங்கள்.
மீனம் ராசிபலன்
உங்களது எண்ணங்கள் உங்கள் செயல்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உங்களது வழியில் உங்களுக்கு ஒரு ஆச்சர்யமான வாய்ப்பு அமைய உள்ளது. அது கைநழுவி செல்லும் முன்பு, அதை இறுகப்பற்றுங்கள். இன்று, உங்களது கருத்தை தெரிவிக்க வெட்கப்படாதீர்கள். தெளிவாகச் சொல்லப்போனால், உங்களிடம் சில நல்ல பழக்கவழக்கங்கள் உள்ளன. எனவே, நம்பிக்கையோடு இருங்கள், முன்னேறுங்கள். பல்நோக்குப் பணிகளை செய்வதற்கான உங்களது திறன் இன்று பெரிதும் பயன்படும். மேலும், அதற்காக நீங்கள் பாராட்டப்படுவீர்கள்.
0 Comments