மேஷம் ராசிபலன்
இன்று உங்களுக்கு சில இனிமையான நினைவுகள் ஏற்படலாம். இந்த தருணங்களை அனுபவிப்பதற்கும், உங்கள் வாழ்க்கையில் அன்பானவர்களைப் பாராட்டுவதற்கும் இந்த நாள் சரியானதாக இருக்கும். நீங்கள் சில காலமாக உங்கள் ஆரோக்கியத்தைப் புறக்கணித்து வருகிறீர்கள். உங்களுக்கு அதிக வேலை இருப்பதால், ஆரோக்கியத்தைப் புறக்கணித்து வருவதாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அறிவுப்பூர்வமான உரையாடல்களில் ஈடுபடுங்கள் அல்லது சில புதுமையான சோதனைகள் மூலம் உங்கள் படைப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
ரிஷபம் ராசிபலன்
உங்கள் விநாடிகள் கணக்கிடப்படுகின்றன. எனவே, கட்டுக்கதைகளில் வரும் வெட்டுக்கிளிகள் வெட்டுவதைப் போன்று, உங்கள் விநாடிகளை வீணடிக்காதீர்கள்! உங்கள் உழைப்பையும், நேரத்தையும் எதிர்காலத்திற்காக திட்டமிடுங்கள். நேர்மறை சொற்களையே பேசுங்கள். நீங்கள் எப்படிப் பேசுவீர்கள் என்பதை உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். பொது இடங்களில் அன்பை பரிமாறுவது உங்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், நீங்கள் உங்கள் அன்பை இன்னும் சுதந்திரமாக வெளிப்படுத்த வேண்டும். நீங்கள், ஒருவருக்கு இரண்டாம் வாய்ப்பு கொடுக்க விரும்புகிறீர்கள். நிச்சயமாக அப்படிச் செய்யுங்கள். நீங்கள் எமது பேச்சைக் கேட்டதில் மகிழ்ச்சியடைவீர்கள்!
மிதுனம் ராசிபலன்
உங்கள் நாள், ஆற்றல் மற்றும் நோக்கத்தில் எழுச்சியை உண்டாகும். உங்கள் செயலில் ஒரு உந்துதல் இருப்பதைச் சொல்லத் தேவையில்லை, நீங்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் இது ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். செய்யும் செயல்களில் முழுமையாகக் கவனம் செலுத்துவது, உங்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கலாம். எனவே, மன அழுத்த மேலாண்மை என்பது உங்கள் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். உங்களுக்குத் தோன்றும் விரக்தியை விலகி விட்டு, பயனுள்ள ஏதாவது ஒன்றைச் செய்ய முயலவும்.
கடகம் ராசிபலன்
இன்று, நீங்கள் உண்மையிலேயே மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கிறீர்கள். இதனால், தலைக்கனம் கொள்ள வேண்டாம். சில இனிமையான சொற்களும், தாராளமான பாராட்டுகளும், நிச்சயமாக இன்று உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் விரும்பும் சில நபர்களிடம் இன்று அன்பைக் காட்டுங்கள். ஒவ்வொரு முறையும் உங்களுக்கு அவர்கள் தேவைப்படும் போது, அவர்களைத் தொடர்பு கொண்டு பேசுங்கள். இன்றைய நாள் நல்ல நாள் என்று அவர்களுக்குக் காட்டுங்கள்.
சிம்மம் ராசிபலன்
இன்று, உங்களது வாழ்க்கையில் நடந்துள்ள அனைத்து நல்ல விஷயங்களுக்காகவும் நன்றியோடு இருங்கள். உங்களுக்குள்ளேயும், மற்றவர்களோடும் சமாதானமாக இருங்கள். ஒழுக்கமோடு இருங்கள். மற்றவர்கள் உங்களை எந்த அளவிற்கு காயப்படுத்தினார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொண்டாலும், அவர்களை மன்னிக்கத் தயாராகுங்கள். ஆன்மீக உணர்வோடு இருப்பது உங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். மேலும், இந்த அனுபவத்தின் முடிவிலே நீங்கள் முழுத்திருப்தி அடைவீர்கள். உங்களது ஆன்மீக நலனுக்கு மன்னிப்பு அவசியம். எனவே, நீங்கள் உங்களுக்குள்ளும், மற்றவர்களுடனும் சமாதானம் செய்து கொள்ளுங்கள்.
கன்னி ராசிபலன்
இன்று ஒரு நண்பருக்கு உங்கள் உதவி தேவைப்படும். கடினமான நேரத்தில் நீங்கள் அவர்களுடன் இருந்ததற்கு அவர்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள். உறவுகள் வலுவின்றி போய் விட்ட போதிலும், நீங்கள் செய்யும் பணிகளைச் சிறப்பாகச் செய்ய விரும்புகிறீர்கள். பணிகளைச் சரிசெய்ய, பணிகள் ஒன்றுடன் ஒன்றாக இணைக்க உதவும் வழிகளைச் செய்யுங்கள். மன்னிப்பதும் மறப்பதும் முக்கியமான ஒன்றாகும். உங்கள் மதிப்பை நிரூபிக்கக் கடினமாக உழைப்பது ஒரு நல்ல விஷயம் தான் என்றாலும், உங்கள் ஆரோக்கியத்தைப் புறக்கணிக்காமல், உங்கள் வேலைகளைத் தொடருங்கள்.
துலாம் ராசிபலன்
உங்களுக்கு இருக்கும்பிரச்சினைகளிலிருந்துவெளியேற, சிறந்தஇராஜதந்திரத்தைப்பயன்படுத்துவது மிகவும் முக்கியம். நீங்கள் நினைப்பதை விட, நீங்கள் கடினமானவராக இருக்கிறீர்கள். நீங்கள் அமைதியாக இருப்பதுடன், விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் செய்ததவற்றுக்குமன்னிப்பு கேட்பது, கடந்த காலத்தின் வடுக்களைக் குணப்படுத்த உதவும். இதனால் பழைய பிரச்சினைகளை விட்டு விடுங்கள், எல்லா பிரச்சினைக்கும் மதிப்பளிக்க வேண்டியதில்லை. புதிய ஒன்றை ஆராய ஒரு வாய்ப்பு கிடைத்தால், உங்கள் அறிவையும், திறமையையும் வளர்த்துக்கொள்ள அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குங்கள். மேலும்ஓய்வுஎடுத்துக் கொள்ள முன்னுரிமை கொடுங்கள்.
விருச்சிகம் ராசிபலன்
நீங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் சமிக்ஞைகளை விட்டுவிடுகிறீர்கள். ஆனால், இன்று நீங்கள் பெறும் பலவிதமான சமிக்ஞைகளால் மிகவும் குழம்பிப் போயுள்ளீர்கள். ஒருதலையான காதல் மிகவும் காயப்படுத்துகிறது. சில தவறான புரிதல்களை மாற்றியமைக்க இந்த நேரத்தை உபயோகித்துக் கொள்ளுங்கள். சில சாதகமான கிரக மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆதலால், இப்போது நீங்கள் சிலவற்றை புதிதாக தொடங்க இது ஒரு நல்ல தருணம் ஆகும். அவசரகோலத்தில் முடிவுகளை எடுப்பதைத் தவிருங்கள். அதிலும் குறிப்பாக, நிதி சம்மந்தமானவைகளில் இதை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.
தனுசு ராசிபலன்
இன்று, நீங்கள் சலிப்படைந்தது போன்று உணர்கிறீர்களா? உங்கள் வாழ்வை எப்படி மேம்படுத்துவது என்று யோசித்து வருகிறீர்கள். இதை யோசிக்க இப்போதே சிறந்த நேரமாக இருக்கும். மற்றவர்களின் யோசனைகள் மற்றும் அவர்களின் அனுபவங்களை பயன்படுத்துவது உங்களுக்கு போதுமானதாக இருக்காது. உங்கள் மூளையை கசக்கி பிழிந்து, ஆழமாக யோசித்து, உங்களுக்கான யோசனையை தேர்ந்தெடுக்க வேண்டும். இது என்னால் முடியாது என்று சாக்குபோக்கு சொல்வது உங்களுக்கு எப்போதும் உதவாது. ஆகையால், இன்று உங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான நேரம். எனவே, முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
மகரம் ராசிபலன்
அவசர நெருக்கடி என்பது எப்போதும் ஒரு மோசமான விஷயம் அல்ல. உண்மையைச் சொல்லப் போனால், ஒரு சிறிய நெருக்கடியானது உங்களை சிறப்பாக கவனம் செலுத்தவும், மிகவும் தேவையான பொறுப்பினைப் பெறவும் உதவும். உங்களது எண்ணத்தில் எண்ணற்ற வசீகர சிந்தனைகள் உள்ளன. ஆனாலும் என்னவோ, உங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் போது, நீங்கள் நிறைய தடுமாறுகிறீர்கள். ஒருவேளை, நீங்கள் உண்மையிலேயே அதிக சிரத்தை செய்த நேரம் இதுவாகும். நீண்டகால பின்விளைவுகளை ஏற்படுத்தும் மிகவும் மோசமான ஒன்றைச் செய்வதற்கு முன்பாக, உங்களை நீங்களே சீர்படுத்திக் கொள்ளுங்கள்.
கும்பம் ராசிபலன்
இன்று நீங்கள் மனதில் வைத்திருந்த அனைத்து இலக்குகளையும் அடைய உத்வேகத்துடன் இருப்பீர்கள். உங்கள் இலக்குகளை அடைய முயற்சி செய்யும் போது, நீங்கள் சந்திக்க வேண்டிய விஷயங்களில் உண்டாகும் சிறிய பின்னடைவுகளைப் பற்றிச் சிந்திக்காதீர்கள். உங்கள் கனவுகள் நனவாக உங்கள் பிடிவாதமே உங்களுக்கு உதவுகிறது. உங்கள் கடின உழைப்பும், விடாமுயற்சியும் உங்களுக்குப் பெரிய வெகுமதியைக் கொடுக்கும். உங்கள் வாழ்க்கை பாதையில் உள்ள கவனச்சிதறல்கள் மற்றும் சோதனைகளை எதிர்ப்பது போராடுவது எளிதல்ல. ஆனாலும், நீங்கள் அதைச் செய்தீர்கள். அதற்காக நீங்களே உங்களைப் பாராட்டிக் கொள்ள வேண்டும்.
மீனம் ராசிபலன்
நிலையற்ற தன்மை மற்றும் தோல்விக்கான வாய்ப்புகளைப் பற்றி பேசியே, உங்கள் மனதை இறுக்கமாக மூடிவிடாதீர்கள். அதற்கு பதிலாக, நேர்மறையான விஷயங்களைப் பேச தேர்வுசெய்யுங்கள். இது நிறைவையும், நம்பிக்கையையும், மறுசீரமைப்பையையும் கொடுக்கும். நீங்கள் நினைப்பதை விட, அதிகமாக ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள். முதலில், நீங்கள் இதை நம்ப வேண்டும். உங்களது தொண்டுள்ளமும், தாராளமனப்பாங்கும் மற்றவர்கள் மத்தியில் உங்களை விரும்பத் தகுந்தவர்களாக மாற்றுகின்றன. சிலபேரது உலகம் நீங்கள் தான். இருப்பினும், அவர்களின் பாசத்தையோ, அன்பையோ நீங்கள் உணரவில்லை. அவர்களுக்கு கொஞ்சம் அன்பைக் காட்டி, அவர்களுக்கு உண்மையிலேயே கொடுக்க வேண்டிய கவனிப்பை கொடுக்கும் நேரம் இதுவாகும்.
0 Comments