மேஷம் ராசிபலன்
இன்றறைய பொழுது தெய்வீக பிரசன்னத்தோடு நேர்மறையானதாக இருக்கும். உங்கள் அன்பின் மீதான ஆர்வம் சில காலமாகக் குறிப்புகளைக் கைவிடுகிறது. உங்கள் உறவு அடுத்த நிலைக்குச் செல்ல தயாராக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், இப்போது இது ஒரு நல்ல நேரமாக இருக்கலாம். நீங்கள் உங்கள் மனதை நிம்மதியாக வைத்திருக்க வேண்டும். உங்கள் ஆணவத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, கடந்த காலத்தில் நீங்கள் தற்செயலாகக் காயப்படுத்திய ஒருவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்..
ரிஷபம் ராசிபலன்
உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நல்ல விஷயங்களுக்கும், நல்ல மனிதர்களுக்கும், நன்றியுடன் இருங்கள். தேவைப்படுபவர்களிடம் பரிவு காட்ட மறக்காதீர்கள். நல்ல அதிர்வுகளுடன் இந்த நாளை ஏன் தொடங்கக்கூடாது? உங்கள் அன்புக்குரியவர்களுடன் ஒரு மாலை நேரத்தைத் திட்டமிடலாம். இன்று, அமைதியாக இருப்பது மற்றும் உங்கள் ஆத்ம தோழருடன் நேரத்தைச் செலவிடுவது உங்களுக்கு நிறைய அமைதியைத் தரும். உங்களை விரும்புபவர்களுடன் அன்புடன் இருக்க நீங்கள் விலை உயர்ந்த இடத்திற்குச் செல்ல தேவையில்லை என்பதற்கு இதுவே போதுமான சான்று. உங்களுடன் தொடர்பில் இல்லாத நண்பர் அல்லது நீங்கள் விரும்புபவரைத் தொடர்பு கொண்டு பேசுங்கள். இது நிச்சயமாக அவர்களின் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்கும்.
மிதுனம் ராசிபலன்
கடின உழைப்பு மிகுந்த பலனளிக்கும். எந்த நேரத்திலும் அதன் முடிவுகளை நீங்கள் காண்பீர்கள். உங்களை நீங்களே நிதானமாகப் மாற்றிக் கொள்ள சிறிது நேரம் ஒதுக்குங்கள். இதை நீங்கள் வரமாகவே பெற்றுள்ளீர்கள்! உங்களுக்குரிய பயணம் மற்றும் வணிகத்திற்கான வாய்ப்புகள் விரைவில் அமையும். அதைச் செயல்படுத்த, சிறந்த முடிவுகளை எடுங்கள். உங்கள் மனதின் எண்ணங்கள் உங்களை ஆதிக்கம் செலுத்த விடவேண்டாம். தேவைப்பட்டால், நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறுங்கள்.
கடகம் ராசிபலன்
உங்களைச் சுற்றிலும் நிறைய வேடிக்கையான விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. உங்கள் முனங்கலை நிறுத்திவிட்டு, ஏதாவது ஒரு செயலை உற்சாகத்துடனும், ஆற்றலுடனும் ஆரம்பியுங்கள். அவ்வாறு, நீங்கள் சரியாக செய்யத் துவங்கும் போது, உங்களுக்கு ஏற்படும் தொடக்கச் சிக்கல் குறைந்துவிடும். இன்று, யாரவது ஒருவருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். இது அன்பைத் திருப்பி செலுத்துவதற்கும், உங்களது கரிசனையை காட்டுவதற்கும் சிறந்த வழியாகும். உங்களது செயல்களில் சுணக்கத்தை ஏற்படுத்தும் சில விஷயங்கள் உள்ளன. சில மோசமான வாழ்க்கைமுறை தெரிவுகள் மற்றும் ஒரு சில தீங்குவிளைவிக்கும் நபர்களிடமிருந்து உங்கள் வாழ்க்கையை விடுபட செய்யவேண்டும்.
சிம்மம் ராசிபலன்
வாழ்க்கை சில நேரங்களில் உங்களுக்கு ஒரு இழுபறியாகத் தோன்றுகிறது. எனவே, உங்களுக்கு ஒரு மாற்றம் தேவை. இந்த வழியில், உங்கள் உள்மனத்தில் தோன்றும்விஷயங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தலாம். உங்கள் வாழ்க்கையில் முக்கிய விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க முயற்சி செய்யுங்கள். இது முக்கிய விஷயங்களைவிரைவாகச்செய்ய உதவும். புதிய யோசனைகள் உங்கள் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடலாம். மேலும், அவற்றைச் சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள உங்கள் மனதைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
கன்னி ராசிபலன்
உங்கள் வாழ்க்கையில், இந்த பணியைத் தேர்வு செய்தது மிகப்பெரிய தவறு என்று நீங்கள் உணரலாம். இது உங்களுக்கு மன அழுத்தத்தை மட்டுமே ஏற்படுத்தும். இதற்காகக் கவலை கொள்ள வேண்டாம். இந்த நிலை விரைவில் மாறும். நிகழ்காலத்திலிருந்து தப்பிக்க நீங்கள் முயல்கிறீர்கள், இது நீண்ட நாட்களுக்கு உதவாது. யதார்த்தத்தைத் தைரியமாக ஏற்றுக் கொள்ளத் தயாராக வேண்டும். உங்கள் வாழ்க்கையில் சில புதிய விஷயங்களை முயற்சியுங்கள். இந்த முயற்சிகளைச் சோதிக்க இது ஒரு நல்ல நாளாக உங்களுக்கு அமையும். இந்த முயற்சிகளின் பலனைப் பற்றி கவலை கொள்ள வேண்டும், தொடர்ந்து பணியைச் செய்து கொண்டே இருங்கள்.
துலாம் ராசிபலன்
நாளும் வளருங்கள். ஆனால், உங்களது உறவினர்களின் வளர்ப்பில் வளரும் நபராக மட்டும் இருக்க வேண்டாம். உங்களது குழந்தைத்தனமான செயல்களை சிலர் சரியான நிலையில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் நல்ல நோக்கங்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் மனதளவில் காயப்பட விரும்பவில்லை யெனில், உங்களது உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் வெளிப்படையாக வெளிப்படுத்தாதீர்கள். உங்களது உடல்நிலை சரியாக இல்லை. எனவே, அதுகுறித்து இன்று நீங்கள் கவனம் செலுத்த வேண்டியதுள்ளது.
விருச்சிகம் ராசிபலன்
நீங்கள் ஏன் சோம்பேறிகளாக இருக்க விரும்புகிறீர்கள்? இந்த கேள்வி சில காலமாக உங்கள் மனதை ஆக்கிரமித்துள்ளது. அதை நீங்கள் அகற்ற வேண்டும். இந்த எண்ணத்தால் உங்கள் மனம் பாதித்து இருந்தாலும், அதை உயர்த்துவதற்கான நேரம் இது. நீங்கள் எல்லாவற்றிலிருந்தும் தப்பிக்க விரும்புகிறீர்கள். ஒருவேளை நீங்கள் இவ்வளவு காலமாகத் திட்டமிட்டிருந்த பயணத்திற்கான நேரம் இது. அந்த அழுத்தங்களைத் தளர்த்திக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் படைப்புத் திறன்களை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்!
தனுசு ராசிபலன்
நீங்கள் தவறான வழியில் செல்வது போன்று தோன்றுகிறது. சரி, இது முற்றுப்புள்ளி போல் தெரிகிறது மற்றும் நீங்கள் இதிலிருந்து தப்பிக்க வழிகளைத் தேடுகிறீர்கள்! ஆனால், சில முறைகள் எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு இருக்கும். நீங்கள் சில காலமாக, மிகவும் கடினமாக உழைப்பதற்காக இரவில் அதிக நேரம் கண்விழித்து வேலை செய்து, சிறிய அளவு ஓய்வு மட்டுமே பெறுகிறீர்கள். இது உங்கள் ஆரோக்கியத்தைப் புறக்கணிக்கக் காரணமாக அமைந்து விட்டிருக்கலாம். நிதானமாக இருங்கள், உங்கள் வாழ்க்கையால் மன அழுத்தத்தை விலகி விடுங்கள்.
மகரம் ராசிபலன்
எல்லாவற்றையும் சரிசெய்ய முயற்சிக்காதீர்கள். உங்களால் எளிதில் தீர்க்க முடியாத சில விஷயங்கள் வாழ்க்கையில் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். இன்று, ஆரோக்கியம் என்பது உங்களது முக்கியமான கருதுகோளாக இருக்கிறது. சரியாகச் சொல்லப் போனால், அது சில காலமாகவே இருந்தது. ஆனாலும், நீங்கள் அதற்கு போதுமான கவனம் செலுத்த ஒருபோதும் அக்கறை காட்டவில்லை. இன்னும் காலம் இருக்கிறது. இந்த பிரச்சினையினை உங்களது உடலின் ஒரு தவிர்க்க முடியாத வேண்டுகோளாக எடுத்துக் கொள்ளுங்கள்.
கும்பம் ராசிபலன்
குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பார்கள். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் வழிகாட்டிகள். அவர்கள், உங்களுக்கு வழிகாட்டும் ஒளியாக இருப்பார்கள். நீங்கள் அவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட லாபத்திற்காக நீங்கள் செய்து கொண்டிருந்த அனைத்து விஷயங்களிலிருந்தும் இது வரவேற்கத்தக்க மாற்றமாக இருக்கலாம். இந்த மாற்றம் பற்றிய பேச்சு நடக்கும். உங்கள் வேலையில் சரியான ஒப்பந்தங்களைச் செய்வதில் நீங்கள் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.
மீனம் ராசிபலன்
நீங்கள் எதைச் செய்தாலும் அதில் கவனம் செலுத்துகிறீர்கள். உங்கள் இலக்குகளை அடைவதில் கவனம் செலுத்த கற்றுக் கொள்வதுடன், நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. அற்பமான விஷயங்களை ஒதுக்கி வைத்து, முக்கியமானவற்றில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு வெற்றி நிச்சயம். நீங்கள் சிலர் மீது கடும் கோபத்தில் இருக்கிறீர்கள். உங்கள் பொறுமையைச் சோதிக்கும் நேரம் இதுவாகும். நீங்கள் அமைதியான மனதுடன் சிந்திப்பது நல்லது. உங்களைச் சிக்கலில் ஆழ்த்த விரும்பும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
0 Comments