மேஷம் ராசிபலன்
பாராட்டுக்கள் என்பது உங்களைப் பாராட்டிய நபரை நீங்கள் நினைவிற் கொள்வதற்கான சரியான வழியாகும். நாங்கள் மனதளவில் செய்யாத புகழ்ச்சியைப் பற்றிப் பேசவில்லை. மாறாக, உண்மையான கருத்துகளைப் பற்றிப் பேசுகிறோம். கடந்த சில நாட்களாக நீங்கள் ஒருவரின் கவனத்தைப் பெற முயல்கிறீர்கள். அந்த முயற்சியை நீங்கள் அவசரமாகச் செய்ய வேண்டாம். பொறுமையாக இருந்து அதை மெதுவாகச் செய்யுங்கள்.
ரிஷபம் ராசிபலன்
சமீபத்தில், அனைத்துவிதமான மன அழுத்தங்களும், பதட்டமும் சேர்ந்து உங்கள் உடல்நலத்தை மிகவும் பாதித்துள்ளது. நீங்கள் ஒவ்வாமை அல்லது நாட்பட்ட நோயினை எதிர்த்துப் போராடுபவராக இருந்தால், வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய முடிவுசெய்ய இது சரியான தருணமாகும். நேர்மறையானவற்றை சொல்வதற்கு இயலாத நபர்களிடமிருந்து விலகியே இருங்கள். உங்களைச் சுற்றிலுமுள்ள நபர்கள் உங்களது மனதிற்கு எதிர்மறையானவற்றையே அளித்துள்ளனர். இன்று, ஆகச்சிறந்த முடிவுகளை எடுக்கும் முன்பு, உங்கள் உள்ளுணர்வுகளை முன்பை விட தற்போது அதிகம் நம்ப வேண்டும்.
மிதுனம் ராசிபலன்
நீங்கள் இப்போது மிகவும் மந்தமான நிலையில் இருக்கிறீர்கள். இது உங்களுக்கு தெரியாமல் உங்களை மெதுவாக செயல்பட வைக்கிறது. இதனால், நீங்கள், உங்கள் விருப்பத்தையும், செயல்பாட்டையும் இழந்து விடாதீர்கள். ஒருவேளை இது நீங்கள் இதுவரை திட்டமிட்டு வைத்திருந்த பணிக்கான நேரமாக இருக்கலாம். நீங்கள் மென்மேலும் முயற்சிசெய்து, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த முயலுங்கள். இன்று, இது உங்களை நல்ல முறையில் வழி நடத்தும்.
கடகம் ராசிபலன்
எப்போதுமே, உங்களது முடிவெடுக்கும் திறனை நீங்களே சந்தேகித்துள்ளீர்கள். சந்தேகப்படுவதை நிறுத்திவிட்டு, நீங்களே சொந்தமாக உங்களது முடிவுகளை எடுக்க முடியும் என்று நம்புங்கள். இன்று, வெறுமனே அமைதியாக இருப்பதும் மற்றும் உங்களது ஆத்ம துணையாளருடன் நேரத்தை செலவிடுவதும் உங்களுக்கு நிறைவான அமைதியைத் தரும். உங்களது அன்பிற்கினியவருடன் நட்புறவை வலுசேர்க்க நீங்கள் ஆடம்பரமான இடங்களுக்கு செல்லத் தேவையில்லை என்பதற்கு இதுவே போதுமான சான்று ஆகும். எனவே, உங்கள் நாளில் இது மந்தமான தருணம் அல்லை என்பதை உங்களது நண்பர்கள் உறுதி செய்வார்கள்.
சிம்மம் ராசிபலன்
உங்களுக்குக்கிடைத்த நல்ல விஷயங்களைப்பற்றிச்சிந்தியுங்கள். உங்களுக்குள் உள்ள சிறந்தவரை வெளியே கொண்டு வர உங்கள் உள்ளார்ந்த திறமைகளைப் பயன்படுத்துங்கள். இன்று உங்கள் உண்மையான திறனை வெளிப்படுத்தவும். நீ நினைப்பதை விட, நீங்கள் பலமானவர். வேலை மற்றும் வீடு இரண்டிற்கும் பயனளிக்கும் சில நல்ல யோசனைகள் உங்களிடம் இருப்பதால், இன்று உங்கள் மனதைகட்டுப்பாட்டுக்குள்வைத்திருங்கள். உங்கள் இனிமையான இயல்பைப் பயன்படுத்திக் கொண்டவர்களைப் பற்றி நீங்கள் சொல்வது சரிதான். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் ஒருதிட்டத்தைக்கொண்டு வர வேண்டிய நேரம் இது!
கன்னி ராசிபலன்
விஷயங்கள் மிக விரைவாக நடந்து கொண்டிருக்கின்றன. மேலும், நடைமுறையில், நீங்கள் கட்டுப்பாட்டோடு இருக்கும் முயற்சியில் செயலற்றுவிட்டதாக உணர்கிறீர்கள். ஆனாலும், இத்தகைய குறுகிய காலகட்டத்தில், இது போன்ற விஷயங்களை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நிறைவேற்ற வேண்டும்! இது உங்கள் ஆரோக்கியத்தை சீர்குலைத்து விடும். நாட்கள் கடக்கையில், உங்களது சமூகம் சார்ந்த மனப்பாங்கினை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். கடந்த கடினமான காலங்களில், உங்களுக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் சிறந்த பிரதிபலனை அளித்து, அன்பு கூருங்கள்.
துலாம் ராசிபலன்
கடந்த நிகழ்ந்த விஷயங்கள் சீராக இல்லாமல் இருக்கலாம். உங்களை விடக் கடினமான காலங்களில் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்குக் கிடைத்த நல்ல விஷயங்களை எண்ணி நேர்மறையாகச் செயல்படுங்கள். விரைவில் உங்களைக் கஷ்டத்தில் ஆழ்த்தும் விஷயங்கள் மாறும். உங்கள் பலம் மற்றும் உங்கள் சமூக திறன்கள் புதிய வாய்ப்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும். அடுத்த சில நாட்களில் பயணங்கள் மற்றும் புதிய முயற்சிகளுக்கு நிறைய இடம் உள்ளது. உங்களைப் புத்துயிர் பெறச் செய்ய இது ஒரு நல்ல நேரம்.
விருச்சிகம் ராசிபலன்
மகிழ்ச்சியாக இருங்கள். உங்கள் எதிர்காலத்தை மேம்படுத்தும் புதிய வாய்ப்புகள் உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த வாய்ப்பை நீங்கள் முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களை கையாள்வதில் உங்களுக்குள்ள திறமைகள் மிகவும் உபயோகமானதாக இருக்கும். இன்றைய தினத்தில் மன அழுத்தம் அதிகமாக இருக்கலாம், அந்த மன அழுத்தம் உங்களை முழுமையாக ஆட்கொண்டு விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களை பாராட்டும் போது, பரந்த மனதுடன் நடந்து கொள்ளுங்கள். இன்று, நீங்கள் செய்யும் செயல்கள், ஒருவரை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.
தனுசு ராசிபலன்
நீங்கள் சில சமயங்களில் உதவியற்றவர்களாகவும் இருந்து இருக்கலாம். இது ஒரு தற்காலிகமான ஒன்று தான். நீங்கள் விரைவில் அதிலிருந்து வெளியே வருவீர்கள். உங்களைப் பற்றி மிகவும் விமர்சனமாகவோ அல்லது கடினமாகவோ இருக்காதீர்கள் .. உங்களைத் தடுத்து நிறுத்தும் விஷயங்கள் ஏதாவது இருந்தால், நீங்கள் அதை வரிசைப்படுத்த வேண்டும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் தேவைப்படும் மாற்றங்களை அடையாளம் கண்டு, அவற்றை அடைய பணியாற்ற வேண்டும். கடினமான நேரத்தில் உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களை உற்சாகப்படுத்துவார்கள். இந்த வாரம் உங்கள் படைப்பாற்றலும் உச்சத்தை எட்டும்.
மகரம் ராசிபலன்
நீங்கள், உங்கள் பணிகளைச் செய்யத் தொடங்குங்கள், இன்று உங்களால் செய்யக்கூடியதில் சிறந்ததைச் செய்ய விரும்புவீர்கள். உங்கள் தற்போதைய முயற்சிகளில் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய சரியான நபர்களுடன் தொடர்பு கொள்ள நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு ஒரு நன்மை நடைபெற வாய்ப்புள்ளது. மேலும், நீங்கள் செய்யும் செயல்கள் மனதளவில், உங்களை நன்றாக உணரச் செய்யும். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் உங்களுக்கு நம்பிக்கை குறைவாக இருக்கலாம், உங்கள் முதுகில் தட்டிக் கொடுத்து ஊக்குவிக்க யாராவது ஒருவர் உங்களுக்குத் தேவைப்படலாம்.
கும்பம் ராசிபலன்
மக்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் நம்முடன் இருக்க மாட்டார்கள். உங்கள் அன்புக்குரியவர் உங்களை விட்டுச் சென்றாலும், அதை ஏற்றுக்கொள்ள நேரம் ஒதுக்குங்கள். உங்கள் குடும்பம் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும். அவர்கள் இல்லாதது உங்கள் வாழ்க்கையைப் பாதித்து விடக் கூடாது. நீங்கள் செல்ல வேண்டிய பாதையில் மெதுவாகப் பயணிக்க வேண்டும். புதிய சூழல்களிலிருந்து புதிய யோசனைகளை மனதில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த மாற்றம் மிகவும் அவசியம் என்பதுடன், அதற்கு ஏற்ப செயல்படத் துவங்குங்கள்.
மீனம் ராசிபலன்
நீங்கள் மிகவும் நேசிக்கும் நபருக்கு ஒன்றைச் செய்வதாக உறுதி அளிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள், நீங்கள் அதை விரைவாகச் செய்ய முடியுமா என்று நினைக்கிறீர்கள், அதற்கான பதில் உங்களிடமே இருக்கிறது. ஆக்கப்பூர்வமான பணிகளை அட்டவணைப்படுத்திக் கொண்டு வேலை செய்யுங்கள், நீங்கள் ஓய்வாக இருக்கும் நேரத்தைக் குறையுங்கள், இது வேதனை நிறைந்த கடந்த கால நினைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். இன்று நீங்கள் சோர்வாகக் காணப்படுவதற்கு அதிகளவிலான உழைப்பே காரணமாக இருக்கிறது. பணிகளுக்கான தகவல்களைக் கவனமாகத் தெரிந்து கொள்வது, பணிகளைத் தேவையான அளவிற்குச் சிறப்பாகச் செய்வது போன்றவையே நீங்கள் அதிகளவு வேலை செய்ய தூண்டுகிறது.
0 Comments