தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது...?


 தமிழகத்தில் அடுத்த வருடம் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை வர இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு சிறப்புத் தொகுப்பு வழங்கப்படும். அதாவது அரிசி, சர்க்கரை உள்ளிட்ட சிறப்பு பரிசு பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும். இந்த வருடம் ரொக்க பண வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. அதன் பிறகு வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகள் வழங்கப்படும்.

இதற்காக வேஷ்டி சேலைகள் தற்போது தயாராகி வருகிறது. இந்நிலையில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஆர் காந்தி தற்போது ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுடன் சேர்த்து பொது மக்களுக்கு இலவசமாக வேஷ்டி சேலைகள் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக 177.64 லட்சம் சேலைகளும், 177.22 லட்சம் வேஷ்டிகளும் தயாராகி வருகிறது. மேலும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பும் மற்றும் இலவச வேஷ்டி சேலை ஜனவரி முதல் வாரத்தில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments