முதல்ல விஜய் கிட்ட பிச்சை..... இப்ப ரஜினி வீட்ல பிச்சை..... சீமானை சீண்டிய விஜயலட்சுமி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக சொன்ன நிலையில் சீமான் அவரை கடுமையாக விமர்சித்தார். அப்படி கடுமையாக விமர்சித்த சீமான் திடீரென ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆளாக்கினார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக கூறிய நிலையில் திடீரென அந்த முடிவை கைவிடுவதாக அறிவித்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை சீமான் நேரில் சென்று சந்தித்தது தொடர்பாக விஜயலட்சுமி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், விஜய் வீட்டில் பிச்சை எடுத்து பார்த்தாச்சு. அது எதுவும் வேலைக்கு ஆகலைன்னு தெரிஞ்சதால் தற்போது போயஸ் கார்டனில் ரஜினி சார் வீட்டில் போய் பிச்சை எடுக்கலாம்னு போய்ட்டீங்களா மிஸ்டர் சீமான்.
விஜய் அண்ணா கிட்ட இருந்து தப்பிக்க வேற எந்த வழியும் கிடைக்கலையா. ரஜினி சார் யாருன்னு ஞாபகம் இருக்கா. அவங்க அரசியலுக்கு வரேன்னு சொன்னவுடன் உங்க வாய் தான் சொல்லுச்சு. அவரு கன்னடக்காரர். உப்பு மிளகாய்த்தூள் எல்லாம் போட்டு வறுத்து எடுத்துப் பார்க்கணும்னு நான் விருப்பப்படுறேன் என்று மேடை மேடையா பேசினீங்க. அவரை கொச்சைப்படுத்தினதை மறந்துவிட்டு அவருடைய வீட்டிற்கு சென்று பிச்சை எடுக்கப் போயிருக்கீங்க. விஜய் அண்ணா கிட்ட இருந்து தப்பிக்கணும்னு நினைச்சு ரஜினி சார் கால்ல போய் விழுந்துட்டீங்க. நான் உங்க மேல வழக்கு போட்டா திமுக காலில் போய் விழுறீங்க. மேலும் உங்களை தமிழ்நாட்டு மக்கள் யாரும் நம்ப மாட்டாங்க. நான் மறுபடியும் சொல்கிறேன் சீமானை மட்டும் யாரும் நம்பாதீங்க என்று கூறியுள்ளார்.
No comments