புழல் சிறைக்கு செல்கிறார் நடிகை கஸ்தூரி
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் ஒருவரது வீட்டில் தலைமறைவாக இருந்த கஸ்தூரியை காவல்துறையினர் கைது செய்து இன்று சென்னைக்கு அழைத்து வந்தனர்.
சென்னையில் எழும்பூர் நீதிமன்றத்தில் கஸ்தூரி ஆஜர் படுத்தப்பட்டார். இவரது வழக்கை விசாரித்த நீதிபதி ரகுபதி ராஜா அவர்கள் கஸ்தூரியை வருகின்ற 29ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கஸ்தூரியை காவல்துறையினர் புழல் சிறைக்கு அழைத்து செல்கின்றனர்.
No comments