வார விடுமுறை.... ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


 உதகையில் தற்போது 2-வது சீசன் தொடங்கிய நிலையில், இதனை அனுபவிக்க சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் போலவே, இன்றும் வார விடுமுறை தினம் என்பதால், உதகையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.ஃபைன் ஃபாரஸ்ட், காமராஜர் அணை, சூட்டிங் ஸ்பாட் ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் காணப்பட்டது. வானுயர்ந்த மரங்கள், பச்சைப் பசேல் என காட்சியளிக்கும் புல்வெளிகள் என இயற்கை அழகைக் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள், செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

Post a Comment

0 Comments