கிண்டி அரசு மருத்துவமனையில் கத்திக்குத்து வாங்கிய மருத்துவர் பாலாஜி இன்று டிஸ்சார்ஜ்

 


கடந்த வாரம் கிண்டியில் உள்ள அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், பணியிலிருந்த புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் தாக்கினார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காததால், மருத்துவரை தாக்கியதாக இளைஞர் கூறினார்.

தொடர்ந்து இளைஞரை கைது செய்த காவல்துறை, அவர்மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தது. தொடர்ந்து மருத்துவருக்கு அந்த மருத்துவமனையிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே மருத்துவர் கத்திக்குத்து சம்பவத்தை கண்டித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

இதனையடுத்து மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பாலாஜி, உடல் நலம் தேறிய நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Post a Comment

0 Comments