• Breaking News

    விமான கழிவறையில் புகை பிடித்த பயணி மீது வழக்குப்பதிவு

     


    ஹைதராபாத்தில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் பறந்தபோது கழிவறையில் இருந்து புகை வந்தது. விமான ஊழியர்கள் கழிவறையை திறந்து பார்த்தபோது பயணி ஒருவர் சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தார்.

    விசாரணையில் அவரது பெயர் முகமது அலி என தெரியவந்தது. இதுகுறித்து ஊழியர்கள் விமான கேப்டனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விமான சட்டத்தின்கீழ் முகமது அலி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    No comments