• Breaking News

    கீரப்பாக்கம் ஊராட்சியில் தனியார் மருத்துவமனை, தொண்டு நிறுவனம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

     


    கீரப்பாக்கம் ஊராட்சியில் தனியார் மருத்துவமனை மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு விநாயகபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் பாரத் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் கிராமங்கள் முன்னேற்ற கழகம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது. இதில் மருத்துவ கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் உதயஜோதி தலைமை தாங்கினார். மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர்கள் கீதா, கீர்த்திகா, ரேஷ்மா, சத்யகலா, பிரியங்காரெஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     சிறப்பு அழைப்பாளராக 4-வது வார்டு உறுப்பினரும், கிராமங்கள் முன்னேற்ற கழகம் எந்த தனியார் தொண்டை நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலருமான சசிகலாதனசேகரன் கலந்துகொண்டு இலவச கண் சிகிச்சை முகாமினை தொடங்கி வைத்தார். இதில் டாக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் இலவச கண் புருவை அறுவை சிகிச்சைக்காக தீவிர பரிசோதனைக்கு பின்னர் 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் பொது மருத்துவ சிகிச்சையில் அனைவருக்கும் இலவசமாக ஊசி, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    No comments