சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி - நடிகை கஸ்தூரி
சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி,'' என்று சென்னை புழல் சிறையில் இருந்து விடுதலையான நடிகை கஸ்துாரி தெரிவித்தார்.தெலுங்கர்கள் பற்றி அவதுாறு பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்துாரி இன்று ஜாமினில் விடுதலையானார்.
சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு வெவ்வேறு அமைப்பினர் பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.மக்கள் தலைவி கஸ்துாரி' என்று கோஷம் எழுப்பி அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட கஸ்துாரி நிருபர்களிடம் கூறியதாவது:
அனைவருக்கும் நன்றி. என்னை குடும்பம்போல் பாதுகாத்த நண்பர்களுக்கு நன்றி. வழக்கறிஞர்களுக்கும் நன்றி. அரசியல் வித்தியாசம் பாராமல் எனக்கு ஆதரவு தந்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி.என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி. ஆந்திரா, தெலுங்கானா மக்களுக்கு மிகப்பெரிய மனம் மிகுந்த நன்றி. புழல் சிறையில் என்னை நன்றாக நடத்திய அனைவருக்கும் நன்றி. எல்லாவற்றுக்கும் மேலாக, சிறுகுரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி. இவ்வாறு நடிகை கஸ்துாரி தெரிவித்தார்.
No comments