அமரன் திரைப்படம் பாதியில் நிறுத்தம்...... பணத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரசிகர்கள்

 


சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமரன் திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பணத்தை திரும்பக் கேட்டு ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகை நாளன்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள சங்கம் திரையரங்கில் திரையிடப்பட்ட அமரன் திரைப்படத்தை காண பலர் வருகைதந்தனர்.

அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திரையரங்க ஊழியர்களிடம் பணத்தை திரும்ப தரக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், திரையரங்கம் சார்பில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.

Post a Comment

0 Comments