கள்ளக்காதலுக்கு இடையூறு..... கணவன் மற்றும் மகனை கொன்று புதைத்த கொடூர பெண்.... அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்


 ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் தீபிகா (25) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜா என்ற கணவரும் ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். இதில் ராஜா எலக்ட்ரீஷியன் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இதில் தீபிகாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்த நிலையில் தன்னுடைய கள்ள காதலுக்கு கணவர் மற்றும் குழந்தை இடையூறாக இருந்ததால் அவர்கள் இருவரையும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று ஏரி கரையில் புதைத்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னுடைய கணவன் மற்றும் மகனை திட்டமிட்டு கொலை செய்து புதைத்து விட்டார். இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜெயராஜ் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட தீபிகாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் கூடுதலாக 5 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டு மொத்தம் 33 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு 3000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபிகா வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments