• Breaking News

    நான் பெருமை கொள்கிறேன் மகளே..... உலகக் கோப்பை கேரம் போட்டியில் தங்கம் வென்ற காசிமாவிற்கு முதல்வர் வாழ்த்து

     


    அமெரிக்காவில் உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்ற நிலையில் அந்த போட்டியில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த காசிமா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் மகளிர் தனிநபர் பிரிவு உள்ளிட்ட 3 பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டை சேர்ந்த காசிமாவின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுனர் மெஹபூப் பாஷா.

    இவருடைய மகள் காசிமா (17) தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு மற்றும் குழு பிரிவு என மூன்று விதமான போட்டிகளிலும் தங்கம் வென்றுள்ளார். இவருக்கு கடந்த மாதம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 1.50 லட்சம் ரூபாய் பண உதவி செய்து வாழ்த்தி அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவிலிருந்து வருகிற 21 ஆம் தேதி காசிமா தாயகம் திரும்புகிறார்.

    இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தற்போது காசிமாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து பதிவில் அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்றுள்ளார் தமிழ் மகள் காசிமா. 3 இடங்களில் முதலிடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள். நான் பெருமை கொள்கிறேன் மகளே. மேலும் எளியோரின் வெற்றியில் தான் திராவிட மாடலில் வெற்றியும் அடங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

    No comments