மாமியார் கொடுமை..... கழிவரையில் இருந்த ஆசிட்டை குடித்து மருமகள் தற்கொலை

 


வேலூர் மாவட்டத்தில் உள்ள வரதலம்பட்டு கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆறு வருடத்திற்கு முன்பு மணிகண்டனுக்கும் ஆயிஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு ஐந்து மற்றும் மூன்று வயதில் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மாதம் ஒருமுறை மட்டும் தான் மணிகண்டன் வீட்டிற்கு வருவார். அடிக்கடி ஆயிஷாவுக்கும் அவரது மாமியார் கிரிஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆயிஷா வீட்டிலேயே போண்டா தயாரித்து அலமாரியில் வைத்துள்ளார். அதனை பார்த்த இளைய மகன் தனக்கு போண்டா தருமாறு அடம் பிடித்தார். உடனே ஆயிஷா தனது குழந்தைகளுக்கு போண்டாவை எடுத்து கொடுத்துள்ளார். இதனை பார்த்த கிரிஜா என் மகன் கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பும் பணத்தை இப்படி வீண் செய்வதா என கேட்டு தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

மாமியார் இப்படி சொல்லிவிட்டாரே என நினைத்து மன உளைச்சலில் இருந்து ஆயிஷா கழிவரையில் இருந்த ஆசிட்டை குடித்து விட்டார் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாமனார் வரதராஜ் தனது மருமகள் ஆயிஷாவை மீட்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆயிஷா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments