அரசியலில் மட்டுமல்ல ஐபிஎல் போட்டியிலும் இதெல்லாம் சாதாரணமப்பா..... கடந்த முறை கோப்பையை வென்ற கேப்டனை கழட்டிவிட்ட கொல்கத்தா அணி.....


ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில் சென்னை அணியில் மீண்டும் எம்.எஸ் தோனி விளையாடும் நிலையில், ஆர்சிபி அணியில் விராட் கோலி விளையாடுகிறார். இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் ரோகித் சர்மா விளையாடுகிறார். அதே சமயத்தில் ஐபிஎல் தொடரில் 3 முக்கிய அணிகளின் கேப்டன்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோன்று கடந்த முறை கோப்பையை வென்ற கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயஸ் ஐயரும் விடுவிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுலும் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் முக்கிய அணியின் கேப்டன்கள் மூவர் விடுவிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியவுடன் நிலையில் இவர்களை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் முக்கிய அணிகளின் 3 கேப்டன்கள் விடுவிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயஸ் ஐயர் கடந்த முறை அந்த அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். இவரும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments