நான் சங்கின்னா....? நீங்க என்ன சொங்கியா....? ஆக்ரோஷமான சீமான்

 


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தது பெரும் பேசும் பொருளாக மாறி வருகிறது. நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் அவருக்கு பயந்து தான் ரஜினிகாந்தை சீமான் சந்தித்ததாக கூறப்படும் நிலையில் தற்போது இதற்கு சீமான் பதில் அளித்துள்ளார். அதாவது பிரபாகரன் பிறந்தநாள் நிகழ்ச்சி கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் இது தொடர்பாக பேசியதாவது, நான் ரஜினிகாந்தை சந்தித்த ஒரே ஒரு காரணத்திற்காக சங்கி ஆகிவிட்டேன் என்றால் நீங்க எல்லாம் அப்போ சொங்கியா.? எல்லா நிகழ்ச்சிகளிலும் ரஜினிகாந்தை தங்கள் அருகில் வைத்திருக்கும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் எல்லாம் யார்.? இல்லன்னா அதுக்கு பேரு அங்கி லுங்கியா.

இல்ல என்னது அது அதுக்கு பேரு. இல்ல நான் ரஜினிகாந்த் பார்க்கணும்னா உன்கிட்ட கேட்டுட்டு தான் போகணுமா. உன்ன கேட்டு தான் நான் தண்ணி குடிக்கணுமா உன்னை கேட்டு தான் நான் சிறுநீர் கழிக்கணுமா. பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றால் சுவற்றில் நாக்கை கொண்டு நக்கு. இப்படி சொல்லும் போது வெறி வருதா இல்லையா.? என் மனைவியை எப்படி கையைப் பிடித்து இழுக்கலாம் என்ற ரேஞ்சுக்கு பேசுகிறார்கள். ரஜினியை சந்தித்தவுடன் சங்கி ஆகிவிட்டார் ஆர்எஸ் எஸ் ஆகிவிட்டார் அப்படியே போய்விட்டார் என்கிறீர்கள். காலையில் நீங்களும் மாலையில் மகனும் சென்று மோடியை பார்த்தீர்களே அப்போது சங்கி வரவில்லையா என்று மிகவும் காட்டமான வார்த்தைகளால் அவர் பேசியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Post a Comment

0 Comments