• Breaking News

    நாகையில் செவிலியர்கள் குற்றச்சாட்டு


     நாகப்பட்டினம்: :  தமிழக அரசு அறிவித்துள்ள கிராமப்புற செவிலியர்கள்  முகத்தை அடையாளம் காணும் அடிப்படையிலான வருகை முறையால் சம்பளம் பிடிப்பதாக அதிகாரிகள் மிரட்டுவதால் மன உளைச்சலில் செவிலியர்கள் பேட்டி:  கிராம செவிலியர்களை கணினியில் மூழ்கடிக்கும் முயற்சியால் மகப்பேறு மரணமும் சிசு மரணம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் குற்றச்சாட்டு.

    தமிழக அரசு கிராமப்புற செவிலியர்களுக்கு FRAS அட்டெண்டன்ஸ் எனப்படும் முகத்தை அடையாளம் காணும் அடிப்படையிலான வருகை முறையை அறிவித்துள்ளது இதனால் கிராமப் பகுதிகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு நெட்வொர்க் பிரச்சனை இருப்பதாகவும் அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரம் கிடையாது எனவும் தினமும் பல்வேறு கட்ட அறிக்கைகளை ஆன்லைன் மூலமாக சமர்ப்பித்து வருவதாகவும்  இதனால் கிராமப்புறங்களில் மருத்துவப் பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்படுவதாகவும் மேலும் நாகை மாவட்டத்தில் 111 செவிலியர்கள் பணியாற்ற வேண்டிய மாவட்டத்தில் 85 செவிலியர் மட்டுமே பணிபுரிவதாகவும் இதனால் கூடுதலாக பணி சுமையில் உள்ளதாகவும் மேலும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் மற்றும் யுவின், பிக்மி  போடுவதில் கணினியில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் மக்களை நேரில் சந்திக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும்  இதனால் மகப்பேறு மரணமும் சிசு மரணமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் மேலும் துறை அதிகாரிகள் வருகை பதிவேட்டில் கை வைப்போம்,சம்பளப் பிடித்தம் செய்வோம் என மிரட்டுவதாகவும் இந்த ஆப்பை பயன்படுத்தக்கோரி கட்டாயப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் மேலும் இது குறித்து தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள்  சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் இந்திரா இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.


    நாகை நிருபர் ஜீ.சக்கரவர்த்தி

    விளம்பர தொடர்புக்கு 9788341834

    No comments