தவெகவுடன் கூட்டணி தொடர்பாக அதிமுக எந்த முடிவும் எடுக்கவில்லை..... விஜய் கட்சியுடன் கூட்டணி என அதிமுக எப்போது அறிவித்தது என பொன்னையன் கேள்வி


திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம்   கழகம் சார்பில்  கழக வளர்ச்சி பணிகள் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து  செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம்  மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் ஏற்பாட்டில் வேம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்   திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும்  பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கழக செய்தி தொடர்பாளரும் முன்னால் அமைச்சரும் பொன்னையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.    

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொன்னையனிடம் அதிமுக தவெக கூட்டணி தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தி குறித்த கேள்விக்கு, தவெகவுடன் கூட்டணி தொடர்பாக அதிமுக எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும், அப்படி ஒரு நிகழ்வு நடைபெறவில்லை என்றும் அது தவறான செய்தி என்றார். விஜய் கட்சியுடன் கூட்டணி என அதிமுக எப்போது அறிவித்தது எனவும் கேள்வி எழுப்பினார். கூட்டணியை இறுதி செய்ய இன்னமும் காலம் இருக்கிறது என்றும் கூட்டணி தொடர்பாக பொதுச்செயலாளர் முடிவை அறிவிப்பார் என தெரிவித்தார். ஆலோசனை கூட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் குற்றச்சாட்டு கூறுவது உட்கட்சி பூசல் கிடையாது கட்சி வளர்ச்சி எனப் பொருள் என்றார். பல கட்சிகளில் இருந்து விஜய் கட்சியில் இணைவது குறித்து கருத்து எதுவும் கூற முடியாது எனவும் பொன்னையன் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் பொன்.ராஜா,சக்கரபாணி  மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி   செயலாளர் பானு பிரசாத் மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ் மாவட்ட துணை செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் சுமித்ராகுமார்  மீனவரணி மாவட்ட செயலாளர் மாங்கோடு வினோத்.உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அதிமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள்பலர் பங்கேற்றனர்.

பொன்னேரி செய்தியாளர் எம். சுந்தர்

Post a Comment

0 Comments