திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மருத்துவர் ராமதாஸ் குறித்து அவதூறாக பேசிய தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை கண்டித்து, வடக்கு மாவட்ட செயலாளர் வி. எம். பிரகாஷ் தலைமையில் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான மருத்துவர் ராமதாசை அவதூறாக பேசியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதனை எடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் வி. எம். பிரகாஷ், மாவட்டத் தலைவர் சு. ரவி முன்னாள் மாவட்ட செயலாளர் துரை ஜெயவேல் மற்றும் உஷா தனசேகர் சுதாகர் அன்பு சங்கர் டில்லிபாபு எத்திராஜ் மதி சங்கர் பாஸ்கர் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோரை தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைத்தனர், பாட்டாளி மக்கள் பாமகவினர் இன் இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
0 Comments