தெற்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. இப்போது அதன் வேகம் 10 கிலோ மீட்டராக குறைந்தது. இன்று மாலை 5.30 மணிக்கு அது பெங்கல் புயலாக உருவாகிறது.
இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சதுரகிரி மலையில் கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு நாளை நடைபெறும் நிலையில் மழை காரணமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கன மழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி வனத்துறை யினர் சதுரகிரிக்கு செல்ல தடை விதித்துள்ளனர்.
0 Comments