தண்டவாளத்தில் கேம் விளையாடிய சிறுவர்கள் இருவர் ரயிலில் அடிபட்டு பலி

 


சேலம் மாவட்டத்தில் உள்ள புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் (16) என்ற மகன் இருந்துள்ளார். இந்த நிலையில் தினேஷும் அவரது நண்பரான ஆனந்த் என்பவரும் நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டே அந்த பகுதியில் இருக்கும் தண்டவாளத்தில் நடந்து சென்றனர். 

அப்போது சேலத்தில் இருந்து விருதாச்சலம் நோக்கி ரயில் வந்தது. செல்போனில் கேம் விளையாடிக் கொண்டே நடந்ததால் இருவரும் ரயில் வருவதை பார்க்கவில்லை.இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் ரயிலில் அடிபட்டு இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஆனந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தும் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments