கோவை: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது

 


கோவை, ஈஷா யோகா மையம் குறித்து, அவதுாறு பரப்பி வருவதாக கூறி, நக்கீரன் இதழை கண்டித்து ஹிந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன், இளைஞரணி தலைவரான ஓம்கார் பாலாஜி, 'நக்கீரன் ஆசிரியர் கோபால் நாக்கை அறுப்பேன்' என்று பேசிய வீடியோ பரவியது. புகாரின் பேரில், அவர் கைது செய்யப்பட்டார்.

இவரது கைது கண்டித்து, இன்று (நவ.,17) தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி போராட்டம் அறிவித்து இருந்தது. கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்த கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை, கோனியம்மன் கோவில் அருகே போலீசார் கைது செய்தனர். அதேபோல், செஞ்சிலுவை சங்கம் அருகே ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற ஒரு பெண் உள்ளிட்ட இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

Post a Comment

0 Comments