கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் உட்கட்சி பூசலால் மோதல்

 


காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர், டெல்லி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவரை வழியனுப்ப காங்கிரஸ் நிர்வாகிகள் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஒரு குழுவும், செல்வம் தலைமையில் மற்றொரு குழுவும் என விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

அப்போது கே.சி.வேணுகோபாலிடம் இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து விமான நிலையத்திற்கு வெளியே வந்த மயூரா ஜெயக்குமாருக்கும், செல்வத்திற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்த வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments