அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை சாடிய திண்டுக்கல் சீனிவாசன்

 


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் அதிமுக கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது, கடந்த தேர்தலில் அரசு ஊழியர்களும் ஆசிரிய பெருமக்களும் தான் நமக்கு எதிராக இருந்தவர்கள். நான் எம்எல்ஏவாக திண்டுக்கல்லில் 22,000 ஓட்டில் வெற்றி பெற்று கையெழுத்து போட போகும்போது துணை தாசில்தார் ஓடி வந்தார். தபால் ஓட்டி எண்ணுகிறோம். கொஞ்ச நேரம் இருங்கள் கையெழுத்து போடாதீர்கள் என கூறினார். சரி வரட்டும் 1000, 2000 ஊற்றுஓட்டுகள்கள் அதிகமாக கிடைக்கும் என உட்கார்ந்து இருந்தேன். 5000 ஓட்டு உங்களுக்கு குறைந்து போய்விட்டது என கூறினார்கள்.

தபால் ஓட்டுகள் திமுகவிற்கு போய்விட்டது. 5000 குறைத்து 17,500 ஓட்டில் நீங்கள் ஜெயித்தீர்கள் என்று கூறினார்கள். அதையாவது எனக்கு கொடுங்க. நான் ஜெயித்துவிட்டேன். அது போதும் என கூறினேன். தாய்மார்கள் பிரசவத்தின் போது குழந்தையை பார்த்து மகிழ்ச்சி அடைவது போல மகிழ்ச்சி அடைந்தேன். என் தொகுதியில் ஒரு தபால் ஓட்டு கூட எங்களுக்கு வரவில்லை. எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள். அட கொலைகார பாவிகளா.. தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ அரசு அதிகாரிகள் ஆசிரியர்கள் குடும்பத்தினர் ஓட்டு 80 லட்சம் ஓட்டு. விளையாட்டு கிடையாது தோழர்களே என பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments