ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சகோதரர் காலமானார்
ஆந்திர மாநிலத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு இருக்கிறார். இவருடைய இளைய சகோதரர் ராமமூர்த்தி நாயுடு. இவருக்கு 72 வயது ஆகும் நிலையில் தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். அதாவது கடந்த 3 நாட்களுக்கு முன்பாக இதயம் மற்றும் சுவாச கோளாறு காரணமாக ராம்பாபு நாயுடு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இவர் கடந்த 1994 முதல் 99 ஆம் ஆண்டு வரை சந்திரகிரி தொகுதியின் தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏவாக இருந்துள்ளார். இவர் நியூயார்க் திரைப்பட அகாடமியின் முன்னாள் மாணவர். இவருக்கு நாரா ரோகித் மற்றும் நாரா கிரிஷ் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். மேலும் இவருடைய மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
No comments