• Breaking News

    மாஜி அமைச்சரின் மண்டையை பிளந்த மர்ம நபர்கள்

     


    மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்., தலைவருமான அனில்தேஷ்முக் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.இம்மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு நவ. 20ல் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஒய்ந்தது.

    முன்னதாக நாக்பூரில் கோட்டோல் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கோட்டோல் ஜலகேடா சாலையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் சரத் சந்திர சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்., கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அனில் தேஷ்முக், தன் மகனும் கட்சி வேட்பாளருமான சலீல் தேஷ்முக்கை ஆதரித்து இறுதி கட்ட பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.அப்போது எங்கிருந்தோ மர்ம நபர்கள் தேஷ் முக் கார் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் அவரது தலையில் பலத்த காயமடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    No comments