பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராளி, ஊராட்சி மன்ற துணை தலைவி தற்கொலை

 


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 13 கிராம பகுதிகளை உள்ளடக்கி 5700 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பரந்தூர், தண்டலம், மடப்புரம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமல்லாமல் குடியிருப்பு பகுதிகளும் அகற்றப்பட உள்ளதால் அந்த கிராம மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் ஏகநாம்புரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அரசு விமான நிலைய பணிகளை தொடர்ந்து செய்தாலும் பொதுமக்கள் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.அந்த போராட்டத்தில் கணபதியின் மனைவி திவ்யா என்பவர் கலந்து கொண்டு வந்தார். இவர் ஏகனாம்புரம் ஊராட்சி மன்ற துணை தலைவராக இருந்தவர். நேற்று முன்தினம் திவ்யா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட திவ்யா குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திவ்யாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments