• Breaking News

    எலும்பு துண்டாக மாறிய சீமான்..... பிரபல பத்திரிக்கையாளர் விமர்சனம்

     


    பாஜக கட்சி ஆட்சியைப் பிடிக்க முடியாத மாநிலங்களில் எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்குவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. தமிழ்நாட்டில் கூட பாஜகவால் ஆட்சியை பிடிக்க முடியாத நிலையில் சில கட்சிகளை தங்களுக்கு ஆதரவாக செயல்பட வைப்பதாக கூறப்படுகிறது. 

    நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக கூறப்பட்ட நிலையில் திடீரென அவர் தன் முடிவை கைவிட்டார். இருப்பினும் ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவர் பாஜகவின் பி டீம் என்றும் சிலர் விமர்சிக்கிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானையும் பாஜகவின் பீ டீம் என்று விமர்சிக்கிறார்கள்.

    இப்படிப்பட்ட விமர்சனங்கள் எழும் நிலையில் ரஜினி பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் போவதாக கூறப்படும் நிலையில் அவரை தொடர்ந்து விமர்சித்து வந்த சீமான் தற்போது ரஜினிகாந்தை திடீரென சந்தித்து பேசியுள்ளார். மேலும் அவர் சந்தித்து பேசும்போது ரஜினிகாந்த் மற்றும் சீமானுடன் சேர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ரவீந்திரன் என்பவரும் உடன் இருந்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை பிரபல பத்திரிகையாளர் கரிகாலன் வெளியிட்டு ஒரு பதிவை போட்டுள்ளார். 

    அந்த பதிவில், ஆர்எஸ்எஸ் புரோக்கர் ரவீந்திரன் துரைசாமி ஏற்பாட்டில் பாஜக அசைன்மெண்டுக்காக ரஜினி மற்றும் சீமான் சந்தித்துள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும் எலும்பு துண்டுக்காக  வெளிப்படையாகவே சீமான் வாலாட்ட  தொடங்கி இருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ள நிலையில் இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

    No comments