குத்தாலத்தில் கார்த்திகை ஞாயிறை முன்னிட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம்; திரளான பக்தர்கள் புனித நீராடல்


அரக்கன் ஒருவனால் சக்தி இழந்த சூரியபகவான் குத்தாலம் வந்து தவம் இருந்து சிவபெருமான் அருள் பெற்றார் என்பது ஐதீகம்.அந்த வகையில் கார்த்திகை மாதம் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் தீர்த்தவாரி உற்சவம் குத்தாலம் காவிரிதீர்த்த படித்துறையில் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் கார்த்திகை மாத முதல் ஞாயிற்று கிழமையை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சமயக்குரவர்கள் மூவரால் பாடல் பெற்ற உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து சாமி மற்றும் அம்பாள் உற்சவர்கள்   மங்கள வாதியங்கள் ஒலிக்க வீதிஉலாவாக காவிரி கரைக்கு கொண்டுவரப்பட்டனர்.

பின்னர் அஸ்திரதேவர்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments