நம்பியூர் ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


ஈரோடு  மாவட்டம், கோபி சட்டமன்ற தொகுதி, நம்பியூர் ஒன்றிய திமுக சார்பில் திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவரும், நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளருமான மெடிக்கல் ப. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நம்பியூர் அருகே உள்ள மலைய பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த அரசு பொது தேர்வு பள்ளியில் முதல் மூன்று இடங்களை குறித்த மாணவர்களுக்கு பரிசு கிடைக்க வழங்கப்பட்டது

கரிச்சிபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் நோட்டு புத்தகம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.அதை தொடர்ந்து நம்பியூர் ஒன்றியத்தில் 15 க்கும் மேற்பட்ட  பள்ளிகளில் மாணவர்களுக்கு 1000 மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது இதில் சிறப்பாக மரம் வளர்ப்பில் ஈடுபடும் மாணவர்களுக்கு அடுத்த வருடம் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

நம்பியூர் அரசு சமூக சுகாதார நிலையத்தில் நேற்று பிறந்த குழந்தைக்கு திமுக 8 வார்டு செயலாளர் ஆனந்தகுமார்  வெள்ளி காயின் மற்றும் குழந்தைக்கு ஊட்டச்சத்து பவுடர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கினார்.முன்னதாக நம்பியூர் ஒன்றியத்தில் அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு அன்னதானம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் திமுக கட்சி நிர்வாகிகள் மாவட்ட விவசாய அணி பிரிவு துணைச் செயலாளர் ஆர்.பி எஸ்.பழனிச்சாமி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் நந்தகுமார்,பேரூர் கழக நிர்வாகி சங்கர்,மாவட்ட கலை இலக்கிய பேரவை இணைச் செயலாளர் முருகசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் வேலுச்சாமி,ஒன்றிய கவுன்சிலர் முருகன்மலைப்பாளையம் திமுக கட்சி நிர்வாகிகள் குப்புசாமி, சேகர், பழனிச்சாமி, மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.




Post a Comment

0 Comments