ஈரோடு தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு முறை செயல்முறை விளக்கம்
ஈரோடு மாவட்டம், தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தடுப்புமுறைகள் குறித்து செயலாக்கம் செய்து காட்டப்பட்டது.
ஈரோடு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில் தீ விபத்து ஏற்படும் போதும் அவசர காலத்தின் போதும் அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எவ்வாறு தீ தடுப்பு முறைகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் , செவிலியர்கள் , காவலர்கள் , பணியாளர்கள் ஆகியோர் தீ விபத்து ஏற்படும் நேரத்தில் எவ்வாறு துரிதமாக செயல்படுவது தீதடுப்பு உபகரணங்களை எவ்வாறு கையாளுவது மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களை எவ்வாறு தீ விபத்தில் இருந்து காப்பாற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீ விபத்து விழிப்புணர்வு செயல்முறை ஈரோடு தீயை ண ப் பு துறையினரால் செய்து காண்பிக்கப்பட்டது.இதில் தீ தடுப்பு அவசரகால பேரிடர் காலத்தில் கையாளப்படும் உபகரணங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தீயணைப்புத் துறை சார்ந்த அதிகாரிகள் வீரர்கள் மற்றும் ஈரோடு அரசு தலைமை மருத்து வமனை மருத்துவர்கள் செவிலியர்கள், பணியாளர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments