கங்குவா திரைப்படம் குறித்து பரபரப்பு அறிக்கை வெளியிட்ட நடிகை ஜோதிகா
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி 89 கோடி வரை இரு நாட்களில் வசூல் சாதனை புரிந்த நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் சத்தம் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தியேட்டர்களுக்கு படக்குழு 2 புள்ளிகள் வரை சவுண்டை குறைத்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் தற்போது நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, தற்போது பரபரப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதாவது கங்குவா படத்திற்கு வேண்டுமென்றே சிலர் அவதூறு பரப்புவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பெரிய பட்ஜெட் படங்களுக்கு இல்லாத விமர்சனம் எதற்காக கங்குவா படத்திற்கு வருகிறது. படத்தில் 30 நிமிடங்கள் சத்தம் அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான். அதனை நானே ஒப்புக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். அதோடு நான் ஒரு சினிமா ரசிகையாக சொல்கிறேன். கங்குவா ஒரு மிகச்சிறந்த திரைப்படம். இதை நான் ஒரு சினிமா ரசிகையாக சொல்கிறேன்.
சூர்யாவின் மனைவியாக சொல்லவில்லை. இந்திய சினிமாக்களில் சில தவறுகள் நடப்பது உண்மைதான். படத்தில் 30 நிமிடங்கள் சரியில்லை என்பதை நானே ஒப்புக்கொள்கிறேன். சத்தம் பிரச்சனையாக இருக்கிறது என்பதும் உண்மைதான்.ஆனால் அதற்காக வேண்டுமென்றே சிலர் அவதூறு பரப்புவதை பொறுத்துக் கொள்ள முடியாது. கங்குவா ஒரு முழுமையான சினிமா அனுபவத்தை கொடுக்கும் படம் என்று கூறியுள்ளார். மேலும் தற்போது ஜோதிகா திடீரென கங்குவார் படம் குறித்த அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments