காஞ்சிபுரத்தில் மனைவி கணவர் மீது குதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் கணவர் மது குடித்துவிட்டு தினமும் தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அந்த மனைவி சித்திரவதை தாங்க முடியாமல் கொடூர செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அந்த பெண் தூங்கிக் கொண்டிருந்த தனது கணவன் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றியுள்ளார். இதனால் அவரது கணவர் படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments