மதுரை: காதலிக்க மறுத்த பெண்ணை கொடூரமாக தாக்கிய வாலிபர்

 


மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள சக்கரா நகரில் தனியார் ஜெராக்ஸ் கடையில் லாவண்யா என்ற இளம் பெண் நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த சித்திக் ராஜா (25) தன்னை காதலிக்க வற்புறுத்தி தினமும் ஜெராக்ஸ் கடையில் நேரில் சென்று லாவண்யாவை தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 17ம் தேதி கடையிலிருந்த லாவண்யாவிடம் காதலிக்க வற்புறுத்தியுள்ளார். அதனை லாவண்யா மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆத்திரமடைந்த சித்திக் ராஜா கடைக்குள் புகுந்து லாவண்யாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.இந்த சம்பவம் குறித்து ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

 மேலும் படுகாயம் அடைந்த லாவண்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தற்போது சிசிடிவி கட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments