எல்லா கடவுளும் ஒன்றுதான் என கூறிய இன்ஸ்டா பிரபலத்தை அடித்து உதைத்த சிறுத்தைகள்


 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன். இவர் சமீபத்தில் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அவர் பழனி முருகன் கோவிலுக்கு சென்ற நீங்கள் முருகன் அழகாக இருக்கிறார் பிள்ளையார் அழகாக இல்லை ஏன் இப்படி இருக்கிறார் என்று கேட்டுள்ளீர்கள். அது எங்க குடும்பத்தோட பிரச்சனை. யார் எப்படி இருந்தா உங்களுக்கு என்ன.? அடுத்ததாக கிறிஸ்தவ மதத்தினர் வழிபடும் தேவாலயத்திற்கு சென்று சிலுவை ஏன் இப்படி இருக்கிறது என்று கேட்பீர்களா. அதன் பிறகு மசூதிக்கு சென்று இப்படி சுவரை தான் பார்த்து கும்பிடுவார்களா என்று கேட்பீர்களா. யார் எப்படி கும்பிட்டால் உங்களுக்கு என்ன. நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் தற்போது அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 20 பேர் சென்று அடித்து உதைத்துள்ளனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நிலையில் தனக்கு கண்ணம் மற்றும் நெஞ்சில் அதிகமாக வலி இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அதோடு அவர் நான் எதுவுமே தப்பாக பேசவில்லை. எல்லா கடவுளும் ஒன்றுதான் என்று கூறினேன். அதற்காக என்னை விசிக கட்சியை சேர்ந்த  20 பேர் வந்து அடித்துவிட்டார்கள். ஒருவர் வந்திருந்தால் கூட நான் சமாளித்திருப்பேன். மொத்தமாக 20 பேர் வந்ததால் என்னால் அடி தாங்க முடியவில்லை என்று கூறுகிறார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

Post a Comment

0 Comments