வன்னிப்பாக்கத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார் மீஞ்சூர் சேர்மன் ஜி.ரவி


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வன்னிப்பாக்கம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது அதேபோன்று 16 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடமும் கட்டப்பட்டது. 

இந்த இரு கட்டிடங்களின் திறப்பு விழா வன்னியப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம் தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர் பானுப்பிரசாத் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி திறந்து வைத்தார். 

அவருடன் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாளையம்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா ரமேஷ்,சமூக ஆர்வலர்கள் சவுரிராஜன்,சாகுல் ஹமீத்,கத்திக்குத்து கந்தன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments