டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் ஓய்வை அறிவித்தார்

 


டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால். இவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். டென்னிஸ் போட்டியில் தலைசிறந்த வீரராக இவர் திகழ்கிறார். இவர் களிமண் தரையில் நடைபெற்ற பிரெஞ்சு கிராண்ட்சலாம் சாம்பியன் பட்டத்தை 14 முறை வென்றுள்ளார். இவருக்கு 38 வயது ஆகும் நிலையில் டெவிஸ்கோப்பையுடன் விடைபெறுவதாக அறிவித்தார். 

இவர் முதல் முறையாக டெவிஸ்கோப்பையில் வெற்றி பெற்று  தன் கேரியரை தொடங்கிய நிலையில் தற்போது அதே டெவிஸ் கோப்பையில் தோல்வியடைந்து இறுதி முடிவை எடுத்துள்ளார்.கடந்த 2004 ஆம் ஆண்டு ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்த நடால் ‌ அதன்பிறகு 29 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஜோகோவிச் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்ற முதல் இடத்தில் இருக்கும் நிலையில், ரபேல் நடால் 22 பட்டங்களை பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார். மேலும் ரபேல் நடால் முடிவை அறிவித்தது அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments