எடப்பாடி பழனிச்சாமியா...? எரிச்சல் சாமியா…? அமைச்சர் மா. சுப்பிரமணியன் விமர்சனம்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதாவது மக்கள் நல்வாழ்வுத்துறை என்பது மக்களின் உயிரை காக்கும் துறையா அல்லது உயிரைப் பறிக்கும் துறையா என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக மருத்துவத் துறையில் நடக்கும் பிரச்சினைகளை நான் சுட்டிக்காட்டினால் அதற்கு பதில் அளிக்காமல் முரண்பாடான செயல்களை செய்வதில் மட்டும்தான் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கவனம் செலுத்துவதாக கூறினார். அதோடு தவறான சிகிச்சை வழங்கப்படுவதாகவும் பட்டியலிட்டு காட்டினார்.
இதற்கு தற்போது அமைச்சர் மா சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் எடப்பாடி பழனிச்சாமியா அல்லது எரிச்சல் சாமியா என்று கூறும் அளவிற்கு தேவையில்லாமல் எதிர்க்கட்சி தலைவர் மக்கள் நல்வாழ்வுத்துறை மீது அவதூறு பரப்புகிறார். அவர் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை உணராமல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அறிக்கை வெளியிடுகிறார். தாங்கள் செய்யும் அற்ப அரசியலுக்காக ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யும் அரசு மருத்துவத்துறையை குறை கூறி குளிர் காயாதீர்கள் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். மேலும் திராவிட மாடல் துறையின் மருத்துவ சேவை ஐநா சபையால் பாராட்டப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
No comments